மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
242 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-51-2.
ஆசிரியத்தின் தூய்மையையும் அதன் வழிமுறைகளையும் தெளிவுபடுத்தும் ஒரு நாவல் இது. ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணக்கருவை தான் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கிட்டிய அனுபவப் படிப்பினைகளினூடாக இந்நாவலில்; கட்டமைத்திருக்கிறார். ஒரு இளம் வாலிபன் அல்லது ஒரு பெண் ஆசிரியராகப் பணிபுரிகின்றபோது அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்களையும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதையும் இந்நூல் உணர்த்தி நிற்கின்றது. இது மகுடம் பதிப்பகத்தின் 82ஆவது வெளியீடாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119162).