17771 சாதகப் பறவைக்கு வேண்டுமோ கானல்நீர்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

102 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-18-4.

காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்களின் போராட்ட வெற்றிக்கான சங்கநாதமாக இந்நாவல் அமைகின்றது. இந்நாவலின் கதாநாயகியும் அவள் சார்ந்த பிற பெண் பாத்திரங்களும் மரபுசார்ந்த சிந்தனைகளிலும் அடையாளங்களிலும் இருந்து தம்மை விடுவிக்கப் போராடுகின்றார்கள். மழைநீரையே உட்கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் சாதகப் பறவையினத்துக்கு கானல்நீர் என்றுமே தேவைப்படாது என்பதை இந்நாவல் அழுத்தம் திருத்தமாக இடித்துரைக்கின்றது. திருமணபந்தம் என்ற கானல்நீர் இன்றைய உலகில் பெண்களுக்கு அத்தியாவசியமானதா என்பதை இந்நாவலின் பாத்திரங்கள் விவாதிக்கின்றன. சித்திரா என்ற இளம்பெண் அவளது ஊரிலுள்ள பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழாவுக்குச் செல்கிறாள். ஊரவர்கள் அவள் ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை எனக் கேள்விகேட்டு, திருமணம் பெண்ணுக்கு அவசியம் என்பதை வற்புறுத்துகிறார்கள். ‘எருமைக்கூட்டம் கலக்கிய குளமாக’ மாறிய அவளது கலைந்த மனது தெளிவுபெறுவதற்காக தனது வாழ்க்கை அனுபவங்களை இரைமீட்டிப் பார்ப்பதாக இந்நாவல் நகர்த்தப்படுகின்றது. பொறுப்பற்ற குடிகாரத் தந்தை ஊரில் கூலிவேலை செய்து குடும்பத்தைக் காக்கும் தாய், அவளுக்கு ஒத்தாசையாக இருந்து தனது கல்வியையும் பல கஸ்டங்களின் மத்தியில் தொடரும் கதாநாயகி சித்திரா, வாழ்வின் எதிர்நீச்சல் போட்டு முன்னேறத் துடித்து அதிலேயே தன் இளமைக் காலத்தை கரையவிட்ட நிலையில் தனது அறச்சீற்றத்தை  சமூகத்தின்பால் வெளிப்படுத்துகின்றாள். தானும் தன் தாயும் பத்துப்பாத்திரம் தேய்க்கப் போகும் முதலாளியம்மா பரிமளமும், அவளது பேத்தியான மங்கையும் இந்நாவலில் இரு முக்கிய பாத்திர வார்ப்புக்கள். இவர்கள் தமது நடவடிக்கைகளின் ஊடாக பெண்ணடிமைத் தனத்துக்கு பெண்களே முக்கிய பங்காளிகள் என்பதை வெளிக்காட்டுகின்றனர். இறுதியில் காலங்காலமாகப் பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மரபுச் சிறையைக் கட்டுடைத்து அவரது கை, கால் விலங்குகளை உடைத்தெறிந்து பெண்களைச் சுதந்திர வானில் பறக்கவிடுகின்றார் யோகேஸ்வரி. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 297ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

rodadas grátis de cassino online

Hollywood Casino Online Casino en ligne Free Spins Rodadas grátis de cassino online Mobile casino gaming delivers unmatched convenience by enabling players to access their