கே.டானியல். கொழும்பு 6: புனைவகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
122 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-9550350-20-9.
கே.டானியலின் இறுதிப் படைப்பான சாநிழல் குறுநாவல் அவர் மறைந்து முப்பத்து ஏழு ஆண்டுகளின் பின்னர் அவரது புதல்வரால் (வசந்தன் டானியல்) வெளியிடப்படுகின்றது. இதே தலைப்பில் அவர் 25.03.1962இல்
‘ஈழநாடு’ இதழில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தார். அதன் விரிவாக்கமே சாநிழல் குறுநாவலாக மலர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்துத் தமிழர்களுடைய உள் நோக்குகள், சமூக உணர்வு, நடைமுறைகள், நம்பிக்கைகள், மரபுகள் ஆகியனவற்றை நன்கு அவதானித்துத் தன்னுடைய நாவல்களிலே பேணியுள்ளமை அவரை ஒரு ‘பண்பாட்டு நாவலாசிரியன்’ என்று கூறுவதற்கு ஆதாரமாகின்றது.’ என பேராசிரியர் . அ. சண்முகதாஸ், 1986 ஆம் ஆண்டு ஈழமுரசு வாரமலர் இதழில் பதிவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.