ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம்;, புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை: வேதா என்டர்பிரைசஸ்).
304 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 18×12.5 சமீ.
செவ்வந்தி, சாமான்ய வாழ்வை நம் கண் முன்னால் துல்லியமாகக் கொண்டு வருகின்றாள். வீரத்தையும் மண் பற்றையும் காட்சிகளாக விபரிக்கிறாள். எந்தக் கடினமான சூழ்நிலையிலும் கல்வியை விட்டுக்கொடாத தனித்தன்மையைக் காட்டி நிற்கிறாள். கல்வியே கருந்தனம் என்பதை வாழ்வில் தாரக மந்திரமாகப் பின்பற்றும் செவ்வந்தியின் காதல் வாழ்வு கதைக்கு சுவையூட்டுகின்றது. ஈழப் பெண்ணொருத்தியின் முப்பதாண்டு வாழ்வு இங்கே கதையாக விரிகின்றது. இந்நூல் ஆசிரியரின் 23ஆவது நாவலாகும்.