சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
452 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0958-34-4.
சிவ ஆரூரனின் பத்தாவது நூலாக இந்நாவல் வெளிவந்துள்ளது. மகாபாரதப் போரைப் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். சிலர் மறுவாசிப்பும் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் போர்க்களத்தில் பரிச்சயமற்றவர்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல், போர்க்களம் பற்றிய பரிச்சயமுடைய ஈழப்போராளி ஒருவரால் எழுதப்படுவது இந்நாவலுக்கு மேலதிக வாசிப்பனுபவமொன்றினை வழங்குவதாயுள்ளது. ஒற்றைப் பார்வையில் மகாபாரதப் போரைத் தரிசித்த எமக்கு, இந்நூல் சிந்தனைக் கிளறல்களை ஏற்படுத்துகின்றது. மிகுந்த கரிசனையுடன் மிக நிதானமாக இந்நாவலை சிவ. ஆரூரன் 89 இயல்களில் ஆக்கியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 312ஆவது நூலாக வெளிவந்துள்ளது.