வெலிவிட்ட ஏ.சி.ஜரீனா முஸ்தபா. கடுவெல: ஏ.சி.ஜரீனா முஸ்தபா, 120 H, போகஹவத்த வீதி, வெலிவிட்ட, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (புத்தளம்: டிசைன் ஓகே அச்சகம்).
xvii, 157 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-97665-0-1.
மேல் மாகாணத்தின் ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வரும் ஏ.சீ.ஜரீனா முஸ்தபா, தனது முதலாவது ஆக்கத்தை ‘ஒரு முடிவில் ஒரு தொடர்’ என்ற தலைப்பில் நாடகமாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 20.08.1985இல் ஒலிபரப்பக் கண்டவர். மித்திரன் வாரமலரில் 31.08.2003 முதல் 16.05.2004 வரை 38 வாரங்களாக தொடர்ந்து பிரசுரமாகிய விறுவிறுப்பான தொடர்கதை ‘ஓர் அபலையின் டயரி’ 2008இல் நூலுருவில் வெளிவந்திருந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் இவர் இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் என மேலும் பல நாவல்களையும் தொடராக வெளியிட்டுள்ளார். இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன. நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் இவர் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும். இலக்கியத் துறையில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட கால அனுபவம் மிக்கவர். இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985-1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தியும் வந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71419).