எம்.எம்.நௌஷாத். மட்டக்களப்பு: கஸல் பதிப்பகம், 219, ஏ.கே.எம்.வீதி, ஏறாவூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (மட்டக்களப்பு: கஸல் பதிப்பகம், 219, ஏ.கே.எம்.வீதி, ஏறாவூர்).
188 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5816-20-0.
இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனராகல மாவட்டத்தில் அமைந்துள்ள மின்சார வசதிகளற்ற சாம்பல் மேடு எனும் குக்கிராமத்தில், உழைத்துக் காப்பாற்ற ஆண் துணையற்ற வறிய குடும்பமொன்றில் பிறந்த பேகம் கதீஜா எனும் பெண்மணியின் சாமானிய ஜீவிதம், ஒரு எளிய மொழியில் எம்.எம். நௌஷத்தினால் சொல்லப்படுகின்றது. பேகம் கதீஜா, அவளது உம்மும்மா, கணவன் ஹாதி சுல்தான், அவனது உம்மா, சாம்பல்மேட்டுக்கு ஹாதி சுல்தான் புலம்பெயர்ந்த காலத்திலிருந்து அவனது காலம் முழுவதும் நண்பனாகத் தொடரும் ஸாஹிபு, அவனது தாயாராகவும் அனைவருக்கும் வில்லியாகவும் வரும் சூனியக்காரி, இவர்கள் இந்நாவலின்; தலைமைப் பாத்திரங்களாக உலாவருகிறார்கள். பேகம் கதீஜாவின் வாழ்வைப்பேசும் இப்புதினத்திலும் பேகம் கதீஜாவும் அவள் கணவன் ஹாதி சுல்தானும் அவரவர் பலம் பலஹீனங்களுடன் செம்மையாக வார்க்கப்பட்டுள்ளார்கள். இது எம்.எம்.நௌஷாத் எழுதிய முதல் நாவல். முன்னதாக ‘பூச்செண்டு போல் ஒரு மனிதன்’, ‘சொர்க்கபுரிச் சங்கதி’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளை இவர் வெளியிட்டுள்ளார்.