17788 மலருமோ உந்தன் இதயம்.

ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம், புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 5: கிலாசிக் பிரின்டர்ஸ்;).

460 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 18×12.5 சமீ.

இணையத்தில் தொடராக வெளியிடப்பட்ட காதல் கதையொன்றின் நூல் வடிவம். தொண்ணூறுகளின் இறுதி மற்றும் இரண்டாயிரமாம் ஆண்டுகளின் ஆரம்பக் காலகட்டத்தின் யாழ்ப்பாண வாழ்வியலை இயல்பாகக் கண்முன் நிறுத்தும் கதையாக இதனை வடிவமைத்திருக்கிறார். தொலைத்தொடர்புகள் வெட்டப்பட்டு போரின் பிடிக்குள் தனித்துவிடப்பட்ட ஒரு சமூகத்தில் வெறும் நம்பிக்கையை மாத்திரம் மனதில் கொண்டு அறியாத நாட்டுக்கு விமானமேறிய பெண்களுக்கு அந்த நம்பிக்கை பொய்த்து விட்டால்? என்ற ஒற்றைப் புள்ளிதான் இந்தக் கதைக்கான அடிநாதமாக அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67565).

ஏனைய பதிவுகள்

Sloturi Gratuite

Content 50 de rotiri gratuite pe wings of gold fără depozit: Netbet Casino Bonus De Lucru Venit Când Adevăr Of Rotirile Gratuite Însă Depunere De

13200 இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 6: யாவர்க்குமாம் வாழ்வுநெறி.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiv, 132 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5