மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
128 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-88-8.
இது நிஜமான வாழ்வியல் சம்பவங்களை மையப்படுத்தி, நிதர்சனமாக எம்முன் காட்சிப் படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஒரு நாவல். இந்நாவலின் கதாநாயகர் லிங்கா. இம்மாமனிதர் எளிமையின் வடிவமாக தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்தவர். தனது பரோபகாரச் செயற்பாட்டினால் எண்ணற்ற நெஞ்சங்களைத் தன்பால் ஈர்த்தவர். ஏழ்மை நிலையிலுள்ள எண்ணற்ற எத்தனையோ மாணவர்களின் கல்விக்கு உரமூட்டியவர். விழுப்புண் சுமந்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒத்தடமிட்டவர். அன்பினால் உறவுகளை அரவணைத்தவர். இம்மனிதநேயரைச் சுற்றிப் பின்னப்பட்டதே மீளும் இராகங்கள். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 267ஆவது நூலாக வெளிவந்துள்ளது.