நா.யோகேந்திரநாதன். யாழ்ப்பாணம்: சூரிய மலர்கள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரிண்டேர்ஸ், நவாலி).
xvi, 244 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-42746-4-8.
‘இரண்டாம் உலகப்போரில் நோமண்டி தரையிறக்கம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோல ஆனையிறவு இராணுவ முகாம் தகர்ப்பிற்கு குடாரப்பு தரையிறக்கம் மிக முக்கியமானது. எனவே அதைப் பதிவுசெய்யவேண்டுமென்ற ஆவலில் நான் பல இடங்களுக்கும் சென்று அந்தப் போரில் பங்குகொண்ட பலரையும் நேரில் சந்தித்து அவர்களிடம் தகவல்களைச் சேகரித்து ’34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு’ என்ற இந்த நவீனத்தைப் படைத்திருக்கிறேன். ஏன் என்றால் குடாரப்பில் போராளிகள் தரையிறங்கி 34 ஆவது நாள் ஆனையிறவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் தங்கள் வெற்றிக் கொடியை ஏற்றினார்கள். எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதில் பங்கேற்ற போராளிகளின் வீரம், அர்ப்பணிப்பு என்பவற்றையும், அதே வேளை மக்கள் இழப்புகள் மத்தியிலும், இடப்பெயர்வுகள் மத்தியிலும் விடுதலைப் போராட்டத்திற்கு தோள்கொடுத்து நின்றமை பற்றியும் என்னால் முடிந்த அளவிற்கு பதிவுசெய்திருக்கிறேன். இது வெறும் இலக்கியம் மட்டுமல்லாது இது ஓர் ஆவணமாகப் பேணப்படும் என்று நம்புகின்றேன். அதன் காரணமாகவே நான் எழுதிய போர்க்காலப் படைப்புகள் அனைத்திற்கும் ‘நீந்திக் கடந்த நெருப்பாறு’ என்றே தலைப்பிட்டுள்ளேன்.’(ஆசிரியர், முன்னுரையில்).