சியாமளா யோகேஸ்வரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
162 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-73-3.
சமுதாய அக்கறையும் ஆரோக்கியமான வருங்கால சந்ததியொன்றை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையும் கொண்ட திருமதி சியாமளா யோகேஸ்வரனால் எழுதப்பட்ட நாவல் இது. பருவ வயதுத் தற்கொலைகளில் கணிசமானவை காதல் தோல்வியின் காரணமாக அமைந்துவிடுகின்றன. திரைப்படங்களும் ஊடகங்களும் காதலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தால் காதல் இன்றேல் சாதல் என்றாகிவிட்டது இளவயதுக் காதலர்களின் நிலைமை. காலத்துடன் காயங்கள் ஆறிப்போய் விடுகின்றன என்ற யதார்த்தத்தையும் காதலின் முக்கியத்துவம் குறைந்து வாழ்க்கையில் சாதிப்பதற்கு வேறு விடயங்கள் நிறையவே உள்ளன என்பதை இளையோர் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அடைவதற்கு அவர்களுக்கும் காலமும், அனுபவ முதிர்ச்சியும், நம்பிக்கையும் அவசியமாகத் தேவைப்படுகின்றது. தொட்டால் துவண்டுவிடும் மனப்பாங்கு கொண்ட இன்றைய சந்ததி அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் விதமாகவே இந்த நாவலின் கதையோட்டம் அமைந்துள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 334ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72230).