க.பரணீதரன், தி.கோபிநாத் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
112 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-38-6.
மறுமலர்ச்சி இதழின் ஆசிரியராக, ஈழத்தின் முதல் புதுக்கவிதையை எழுதியவராக, சிறுகதை எழுத்தாளராக, ஈழத்தின் முதல் கவிதை இதழான தேன்மொழியின் ஆசிரியராக, அவ்வப்போது பல்வேறு சஞ்சிகைகளை வெளியிட்டவராக, வரதர் வெளியீட்டின் பதிப்பாளராக எனப் பல்வேறு விதங்களில் நன்கறியப்பட்டவர் வரதர் என்றழைக்கப்படும் தி.ச.வரதராசன். இத்தொகுப்பில் வரதர் (தி.ச.வரதராசன்) எழுதிய உணர்ச்சி ஓட்டம், வென்றுவிட்டாயடி இரத்தினா, நளினியின் நாயகன், தையலம்மா ஆகிய நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. தையலம்மா குறுநாவலின் நிறைவுப் பகுதி கிடைத்திராத போதிலும் ஆவண முக்கியத்துவம் கருதி பூர்த்தியடையாத அக் குறுநாவலும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 404ஆவது நூலாக வெளிவந்துள்ளது.