கோபிகை (இயற்பெயர்: திருமதி ஜயிலா பார்த்தீபன்). யாழ்ப்பாணம்: திருமதி ஜயிலா பார்த்தீபன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xvi, 136 பக்கம், விலை: ரூபா 999., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-94988-1-5.
நூலாசிரியர் யாழ்ப்பாணத்தில் கரணவாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவியான இவர் ‘ஒளி அரசி’ என்ற சிறு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் செயற்பட்டவர். தமிழருள் என்ற இணையத்தளத்தில் ஆறு ஆண்டுகளாக பகுதிநேரப் பணியாளராக இயங்கிவருகிறார். இவ்விணையத்தளத்தில் தொடராக வெளிவந்து கணிசமான வாசகர்களை கவர்ந்திருந்த இந்நாவல் நூலுருவில் வெளிவந்துள்ளது.