மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
vi, 142 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 19×13 சமீ., ISBN: 978-624-5849-47-5.
உண்மைச் சம்பவங்களுடன் பயணிக்கும் இந்நாவல் வெறும் கற்பனைகளின் வசனங்களல்ல. அது ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு. உயிர்களுக்கு வலி வரும்போது அது எங்கிருந்து வருகின்றது அல்லது எப்படி வருகின்றது என்பதனைத் தெரியாதிருப்பது கொடிய துன்பம். இந்த உலகத்தில் பல ஆயிரக் கணக்கானவர்கள் பலவித வலிகளுடன் எம்மிடையே வாழ்கின்றார்கள். உடல் வலி, உள வலி போன்ற உபாதைகளோடு தம் வாழ்நாளைக் கழித்துவரும் இவர்களும் இவ்வுலகில் எம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உயர வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தினால்கூட அணுகமுடியாத வலிகள் இவ்வுலகில் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதும் இந்த நாவலின் ஒரு நோக்கமாகும். சமூகம் எப்படி இந்த வலிகளைக் கையாள்கின்றது என்பதை வெளிக்காட்டவும் இந்நாவல் உதவிபுரிகின்றது. இது மகுடம் வெளியீட்டகத்தின் 79ஆவது நூலாக வெளிவந்துள்ளது. புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் நூலாசிரியர், சிறுகதை மஞ்சரி என்ற சஞ்சிகையின் ஆசிரியரும், இலட்சுமி பதிப்பக நிறுவனருமாவார். இவர் எழுதிய Invisible Pain என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம் இதுவாகும்.