17798 வெள்ளி. ஜே.கே. (இயற்பெயர்: ஜெயக்குமாரன் சந்திரசேகரம்).

யாழ்ப்பாணம்: வெண்பா பதிப்பகம், 20A, யாழ். இந்துக் கல்லூரி அருகாமை, 1வது பதிப்பு, ஆவணி 2023. (அச்சக விபரம் தரப்படவில்ல).

152 பக்கம், விலை: ரூபா 4189.50, அளவு: 24×16.5 சமீ.

2023 ஆண்டில் திரு. ஜேகே அவர்களின் ‘வெள்ளி’ என்ற மாய அறிவியல் புனைவு மெல்பர்ன் வாசகர் வட்டத்தின் முதல் பொது நிகழ்வில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. சங்க நிலத்தில் வாழும் ஒரு கொல்லனின் மகளான ‘வெள்ளி’ யும் நவீனத்து இளைஞனான ‘கோடன்’ என்பவனும் கண்டும் கேட்டும் உண்டுயிர்த்து, உற்றறிந்து செய்யும் காதலின் கணங்களால் நிறைந்த மாயப் புனைவான இந்த நாவல் மிகுந்த ரசனைக்குரிய பதினொரு குறுந்தொகைப் பாடல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனது தாத்தாவிற்கு எழுதும் கடிதம் மூலமாக இந்த மாய அறிவியல் புனைவு நாவலுக்குள் நம்மை ஆசிரியர் இழுத்துச் செல்கிறார். ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் கோர்டன் என்ற பேரனுக்கும் இடையில் நடக்கும் ஏறத்தாழ இரண்டு மணிநேர உரையாடலாக இதனை பார்க்கலாம். நவீன விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் சங்ககால தமிழ் இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்ககாலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க ஆசிரியர் முயன்றுள்ளார். வெவ்வேறு இரண்டு காலப் பிரிவுகளை இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் பணியில் இந்நாவல் வெற்றியடைகின்றது. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு நேர்த்தியாகப் பரிமாறப்பட்டுள்ளது. கோடனின் எண்ணவோட்டத்தோடு வாசகனையும் ஆசிரியர் இணைத்து கொள்கிறார்.

ஏனைய பதிவுகள்

15822 விபுலாநந்த அடிகளாரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு.

சி.மௌனகுரு (மூலம்), காசுபதி நடராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரைக் குழு, விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, நொவெம்பர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). vii, 41 பக்கம்,

15668 அழகு: சிறுகதைத் தொகுப்பு.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, மிசிசாகா, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சேது இன்போடெக்). 160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. இந்நூலில் அழகு, சீட்டு, சகுனம், பென்சன், வடு,