பத்ரஜி மகிந்த ஜயதிலக (சிங்கள மூலம்), டபிள்யூ. சுமணரத்ன (தமிழாக்கம்). ரத்மலான: சர்வோதய விஸ்வலேகா வெளியீடு, 41, லும்பினி மாவத்தை, 1வது பதிப்பு, 1998. (ரத்மலான: சர்வோதய விஸ்வலேகா பதிப்பகம், 41, லும்பினி மாவத்தை).
(8), 162 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-599-121-9.
‘ஸஸர ஸரன்னோ’ (Wanderer’s in Eternity) என்ற தலைப்பில் பத்ரஜி மகிந்த ஜயதிலக எழுதிய சிங்கள நாவலின் தமிழாக்கம் இது. சுந்தரமும் அவன் குடும்பமும் (1958-1959), லயனல்-அஜித் (1960-1964), லயனல்-அனுலா-விஸாகா (1969-1971), ஜானகி-சிவகரன்-வசந்தராஜா (1972), அஜித் (1983), வசந்தராஜா (1987), அஜித்-சூபூதி சுவாமிகள் (1988), ஜானகி-அஜித்-வசந்தராஜா (1988), அனைவரும் (1993) ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. மூலநூலாசிரியர் மதிப்பிற்குரிய D.R.விஜயவர்த்தன விருதினைப் பெற்ற இலக்கியவாதியாவார். 1973இலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். இது இவரது 31ஆவது நூலாகும். இலங்கை வரும் காலங்களில் அவ்வப்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், ரூபவாகினி தொலைக்காட்சி நிறுவனத்திலும் சேவையாற்றி வந்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 112542).