இராஜினிதேவி சிவலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0958-31-3.
திருமதி இராஜினிதேவி சிவலிங்கம் யாழ்ப்பாணம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் உதவி அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். மாணவர்களின் தேவைகளை அறிந்து அவர்களின் தேடல்களுக்கு வழிகாட்டி வரும் இவர், உயர் கல்வி பயிலும் மாணவர்களின் பல்துறை சார் அறிவு விருத்திக்காக ‘பல்துறைசார் கட்டுரைகள்’ என்ற இந்நூலை வழங்கியுள்ளார். மாணவர்களுக்கு மாத்திரமன்றி பொதுவான வாசகர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும். நூலாசிரியரின் பல்துறைசார் அறிவு இந்நூலில் வெளிப்படுகின்றது. இக்கட்டுரைகள் தற்காலத்தில் ஈழத்தின் கவிதை வளர்ச்சியில் பெண் கவிஞர்கள் பற்றிய பார்வைகள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் மனிதநேய சிந்தனைகள், சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பும் அறங்கள், பொய்யாமொழிப் புலவர் கூறும் நட்பின் இலக்கணம், பல்லவர் காலத்தின் கலைச்சிறப்பு, சோழப்பெருமன்னர் கால பொற்கால ஆட்சி, இந்துக் கலைமரபில் சிற்பக்கலை, தை பிறந்தால் வழிபிறக்கும், புத்தாண்டுப் பாரம்பரியங்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு, ஈழத்தில் பத்தினித் தெய்வ வழிபாடு, ஆசிரியர் பணியில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், ஆசிரியப் பணிகளில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஒரு பால்நிலைக் கண்ணோட்டம், தமிழ்ப் பெண்கள் உண்மையில் விடுதலை பெற்றுள்ளார்களா?, இன்றைய கால மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும், ஆன்மீகச் சுடரேற்றும் நல்லூர் முருகன், பழம்பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம், உண்மைக்கும் நேர்மைக்கும், அதிகரிக்கின்ற வீதிவிபத்துக்களும் அகாலமாகின்ற மனித உயிர்களும் ஆகிய 19 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 144ஆவது நூலாக வெளிவந்துள்ளது.