மலர்க் குழு. கொழும்பு 6: அமுதவிழா வெளியீடு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2023. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
x, 304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ., ISBN: 978-624-6036-01-0.
இம்மலரில் புதுமை இயலும் கருத்து வினைப்பாடும் (சபா.ஜெயராசா), மொழியியல் நோக்கில் இலக்கணமும் இலக்கண மரபுகளும் (எம்.ஏ.நுஃமான்), ஈழத்து தமிழ் உரைமரபு (எஸ்.சிவலிங்கராஜா), தமிழ் இலக்கிய ஆய்வுச் சூழலில் நவீன கோட்பாடுகள்: பேராசிரியர் க.கலாசபதியின் தமிழ் வீரநிலைக் கவிதை நூலை முன்வைத்து ஓர் உசாவல் (கந்தையா சண்முகலிங்கம்), நவீனத்துவத்தின் வருகையுடனான தமிழ் இதழியலும் தமிழ் மொழியும் (ரமீஸ் அப்துல்லா), ஈழத்துத் தமிழ் நாவல்கள் நோக்கும் போக்கும் (ம.இரகுநாதன்), ஈழத்து கிழக்கிலங்கை தமிழ்ச் சிறுகதைகள் பார்வையும் பதிவும் (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), ஈழத்துத் தமிழ்க் கவிதையும் நவீனத்துவமும் (தி.செல்வமனோகரன்), ஈழத்தில் சிறுவர் இலக்கியம்: வளர்ந்ததும் வளரவேண்டியதும் (செ.யோகராசா), தமிழிலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள்: திறனாய்வியல்சார் இயங்குநிலைகள்: ஒரு வரலாற்றுப் பார்வை (நா.சுப்பிரமணியன்), ஈழத்துத் தமிழிசை ஊற்றுகளும் ஓட்டங்களும் (சுகன்யா அரவிந்தன்), ஈழத்து ஆக்க இசை (நா.சண்முகலிங்கன்), ஈழத்துச் சூழலில் தமிழ் ஆடல் கலையின் கட்டமைப்பு: சமூக வரலாற்று நோக்கு (அருட்செல்வி கிருபைராஜா), இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகள் (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), சமஸ்கிருத-தமிழ் மொழிபெயர்ப்புப் பணியில் ஈழத்தவர் பங்களிப்பு (மைதிலி தயாநிதி), கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சினைகளும் (லறீனா அப்துல் ஹக்), ஈழத்துத் தமிழ்ப் பெண்ணியம்: தோற்றமும் தொடர்ச்சியும் (வானதி காண்டீபன்), கூத்தைச் சமகாலத்திற்கு உரியதாக்கும் ஈழத்து அரங்க அரசியல் (சி.ஜெயசங்கர்), ஈழத்தமிழ் மூத்த நாடக மரபான கூத்துக்களின் நூற்பதிப்புக்கள் (யோ.யோண்சன் ராஜ்குமார்), கண்ணீர சுமந்த ரயில்களும் கடலைத் தின்ற சோகமும் மலையகத் தமிழரின் இந்தியப் புலம்பெயர் அனுபவங்கள் பற்றிய சிறுகதைகள் (எம்.எம்.ஜெயசீலன்), ஈழத்தில் தமிழ் நாட்டார் பாடல் தொகுப்பு முன்னோடி முயற்சிகள் (க.இரகுபரன்), இருப்பு இழப்பு நினைவு ஊர்களைச் சுவடியாக்கம் செய்தல் விரிவான உரையாடலுக்கான முற்குறிப்பு (பாக்கியநாதன் அகிலன்) ஆகிய 22 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலர்க் குழுவில் பேராசிரியர் வ.மகேஸ்வரன், முனைவர் க.இரகுபரன், சாகித்தியரத்னா தி.ஞானசேகரன், திரு. தெ.மதுசூதனன், திருமதி வானதி காண்டீபன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.