கோபிகை (இயற்பெயர்: திருமதி ஜயிலா பார்த்தீபன்). யாழ்ப்பாணம்: திருமதி ஜயிலா பார்த்தீபன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
x, 48 பக்கம், விலை: ரூபா 499., அளவு: 20×13 சமீ., ISBN: 978-624-94988-0-8.
ஆசிரியை தான் பார்த்த, கேட்ட, தேடிய, நேசித்த விடயங்களை கட்டுரைகளாகப் பதிவுசெய்துள்ளார். பெண்ணியம், பெண்ணின் பாங்கு, பெண் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், பெண்கள் தாங்குகின்ற வலிகள், தனிமனித சுதந்திரம், சமத்துவம் என்பவற்றுடன் சமூகம் சார்ந்தவையும், இலக்கியம் சார்ந்தவையுமான கட்டுரைகளும் இங்கு இடம்பிடித்திருக்கின்றன. அன்பு என்பதில் தொடங்கி தவம் என்பதில் முடிவுறும் கட்டுரைத் தலைப்புக்கள். நூலாசிரியர் யாழ்ப்பாணத்தில் கரணவாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவியான இவர் ‘ஒளி அரசி’ என்ற சிறு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் செயற்பட்டவர்.