ஆ.சபாரத்தினம் (மூலம்), நா.நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
284 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-05-4.
இந்நூலில் மல்லிகை, அலை, திசை, காலம் ஆகிய இதழ்களுக்கு காவல்நகரோன் நாரந்தனையூர் அறிஞர் ஆ.சபாரத்தினம் அவர்கள் எழுதிய 34 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘மல்லிகை’ யில் வெளிவந்த ஸ்பானியக் கவி பற்றி ரூஷ்யக் கவிஞன்-1, ஸ்பானியக் கவி பற்றி ரூஷ்யக் கவிஞன்-2, லோ(ர்)க்காவின் துன்பியல் நாடகங்கள், மாயகோவ்ஸ்கி, பொப்பரும் மார்க்ஸீயவாதிகளும், டோஸ்ரோயேவ்ஸ்க்கி, சார்த்தர் இருப்புவாத இலக்கியப் படைப்பாளி, ஒரு தென் அமெரிக்க இலக்கியகர்த்தா, அரசியலும் இலக்கியமும் இலத்தின் அமெரிக்க எழுத்தாளரின் பங்களிப்பு, சாமுவேல் பெக்கெற், நவீன ஜேர்மன் நாடகாசிரியர் பிறெஃக்ற் ஓர் அறிமுகம், கஃப்கா ஒரு அறிமுகவுரை, கார்ள் பொப்பர், சீமோன் பூவாவும் சார்த்தரும், ஜோர்ஜ் ஓவெல், கற்பனை மன்னன், மலாமூட் உலகளாவிய எழுத்தாளர், கண்ணாரக் காண ஒரு காவலூர்க் கவிஞர், கபிரியேல் மா(ர்)சல் பிற இருப்புவாதிகளுடனான தொடர்பு, காலஞ்சென்ற சுவீடிஷ் எழுத்தாளர் ஐவர் லோ ஜொஹான்ஸன், ஆந்த்ரெ மால்றோவின் ஆரம்பகால நாவல்கள், கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றது, சாமுவேல் பெக்கெற், ழக்கே தெரிதா, இலக்கியம் பழைமையைப் புதுமை விழுங்கிவிடுமா? ஆகிய 25 கட்டுரைகளுடன், ‘அலை” சஞ்சிகையில் வெளியான அலை விமர்சனக் கூட்டம், ரொம் ஸ்ரொப்பட், எலையாஸ் கனெற்றி, பண்டிதமணி ஆகிய நான்கு கட்டுரைகளும், ‘திசை’ இதழ்களில் வெளியான ஒரு விளக்கிலிருந்து ஏற்றிய பல விளக்குகள், மாசலின் சிந்தனை பற்றி நம்மவரின் புதிய நூல், சைவ சித்தாந்த ஆய்வு வட்டம், மரணம் பற்றிய நினைவுகள் ஆகிய நான்கு கட்டுரைகளும், ‘காலம்’ சஞ்சிகையில் இடம்பெற்ற ஏ.ஜே.கனகரத்னா ஒரு பார்வை என்ற கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 280ஆவது நூலாக வெளிவந்துள்ளது.