17809 காலம் வனைந்த கலயங்கள்.

ஆதிலட்சுமி சிவகுமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

152 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-42-3.

ஆதிலட்சுமி சிவகுமார் சமூக உணர்வுள்ள ஈழத்துப் பெண் எழுத்தாளரும் பாடலாசிரியருமாவார். இவர் வன்னி மண்ணிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஈழவிடுதலைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், விமர்சனங்கள், நாடகங்கள் என்று பல தளங்களிலும் ஒரு சமூக விடுதலை நோக்கிய எழுத்துப் போராளியாக இயங்கிக் கொண்டிருந்தவர். 1990இலிருந்தே ‘புலிகளின் குரல்’ வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். பின்னாளில் புலம்பெயர்ந்து தற்போது சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகிறார். இத்தொகுப்பில் இவர் எழுதிய 33 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அவ்வப்போது அந்தந்தக் காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பதிவாக்கும் நோக்குடன் இவரால் எழுதப்பட்டவை. சமூகத்தை நோக்கிய இவரது பார்வை மிகத் தெளிவானது. தன்னைச் சுற்றிலும் வாழும் மனிதர்களின் மீதான கவனக்குவிப்பே இவரது கட்டுரைகளுக்கு வலிமை சேர்க்கின்றன. அவரைக் கவர்ந்தவர்களின் வாழ்வின் வசீகரங்களையும், மகிழ்வையும், அலைவுழல் வாழ்க்கையையும், அதனால் ஏற்படும் இழப்புகளையும் அதன்வழி தான்கொண்ட துயரங்களையும் தன் கட்டுரைகளில் வார்த்தை ஜாலங்களின்றி எளிமையாக பதிவு செய்கின்றார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 407ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

10 Melhores Slots Na Betclic Em 2024

Content Os Critérios Puerilidade Listagem Dos Melhores Casinos Online Jogos Valendo Algum Online Elevado Provedor Das Slots Como Mais Pagam Acercade Portugal Melhores Casinos Online