பத்மா இளங்கோவன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (கொழும்பு 6: குமரன் அச்சகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 72 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 775., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-6098-07-0.
ஞானம் சஞ்சிகை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் வெளியான பத்மா இளங்கோவனின் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சிறுவர் இலக்கியப் படைப்புகளும் அதன் நுட்பங்களும், ஒலியும் மொழியும் குழந்தைகள் இசையும், கொரோனாவும் யோகக் கலையும், தாயைப் போற்றுவோம், குருநாதர் யோகர் சுவாமிகள், பாரதியும் குழந்தைப் பாடல்களும், ஈழம் கண்ட குழந்தைக் கவிஞர்கள், ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்த காலமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர் நாவேந்தன், குழந்தை இலக்கியத்தை முன்னெடுத்த இலக்கிய ஆசான் த.துரைசிங்கம் ஆகிய ஒன்பது கட்டுரைகளுடன், ‘பத்மா இளங்கோவனின் செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் சிறுவர் பாடல் மீது ஒரு பார்வை’ (இ.சம்பந்தன்-ஜேர்மனி), ‘பத்மா இளங்கோவனின் செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப்பாடல்கள் ஒரு கண்ணோட்டம்’ (இ.சம்பந்தன்-ஜேர்மனி) ஆகிய திறனாய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.