சிவா முருகுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: நம்மட முற்றம், 1வது பதிப்பு 2025. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xvi, 110 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×11.5 சமீ., ISBN: 978-624-93930-8-0.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான சிவா முருகுப்பிள்ளை கனடாவில் கணினித்துறையில் மேற்படிப்பினை தொடர்ந்தவர். உயர்தர பௌதிகவியல் ஆசிரியராகவும், கணித ஆசிரியராகவும் அறியப்பட்டவர். தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இவரது 19 பலவினக் கட்டுரைகளை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. தனது எழுத்துக்களின் களமாக விளிம்புநிலை மக்களின் வாழ்வியல், அவர்களுக்கான வாழ்வை உறுதிப்படுத்தும் சமூக மாற்றம், சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பனவற்றை கொண்டுள்ள இவர், பொதுவான இடதுசாரிச் சிந்தனையுடனான செயற்பாட்டுக் கருத்துக்களை இக்கட்டுரைகளின் வாயிலாக விதைக்க முற்பட்டுள்ளார். இதில் மனிதகுல வாழ்வின் பாய்ச்சலுக்கு மார்ச் 14, தாலாட்டும் மொழியே தாய்மொழி, தமிழ் இன்னும் வாழும், மனங்களைப் பாருங்கள் மதங்களைப் பாராதீர்கள், தமிழரின் பண்பாட்டினை எடுத்தியம்பும் காலத்தில் ஈழத்தமிழர்கள், விதைகளை விதைப்போம் ஹீரோக்களைக் கொண்டாடுவோம், சட்டை உறவுகளின் நீட்சி, எழவேண்டும் தற்சார்புப் பொருண்மியச் சிந்தனை, உறவுகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் சமூக வலைத்தளங்கள், தன்னம்பிக்கை முன்நகர்த்தும் சிறந்ததோர் கருவி, பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை உளவியல், மர நிழலும் மன நிஜமும், குடைகளின் மறுபக்கங்கள், நீரின்றி அலையும் உலகு, உன்னால் முடியும் தம்பி, சிசு பாலன்களைக் காப்பாற்றுவோம், திருமணம் இரு மனங்களுக்கானது மாத்திரமல்ல, வாழ்வாங்கு வாழ்பவர்கள், திருகணையும் திருமேனியும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.