ம.பிரசாலினி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-5881-49-9.இந்நூலில் ம.பிரசாலினி எழுதிய 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அண்டத்தில் பயணிக்கும் அற்புதமான அனுபவம், சினிமாப் பாடல்களும் சிறு தவறுகளும், நாட்டத்தின் வாட்டத்தை இனம் காட்டும் ‘ரோஸி’, கொமிக்ஸ் உலகில் புதிய வரவு ‘வெற்றியைத் தேடி’, நடுநிசி வெயில், தாத்தாவின் முன்றில், தீராத வார்த்தைகளில் தாயன்பின் பதிவு, ‘வடமாகாண சஞ்சிகைகள் ஓர் அறிமுகம்’ என்னும் அற்புதமான ஆவணம், வடிவழகையனின் ‘குறும்பா கொஞ்சம் குறும்பா’, வாழ்க்கைப் போராட்டத்தில் உதித்த செந்தாமரை ‘செல்லமுத்து’, யாழ்ப்பாணத்து நவீன கவிதைகளில் உவமை, எங்கட கொமிக்ஸ் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் தரம் 12 கலை வகுப்பிலே பயிலும் ம.பிரசாலினியின் பல ஆக்கங்கள், தீம்புனல் மற்றும் சஞ்சீவி (உதயன்) பத்திரிகைகளில் பிரசுரமானவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 229ஆவது நூலாக வெளிவந்துள்ளது.