ஐ.சாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (சென்னை 5: Adyar Students Xerox Pvt Ltd, 275, ஹபீபுள்ளா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-6110-556-2.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி இலக்கிய ஆளுமை மிக்க ஐயாத்துரை சாந்தன், யாழ்ப்பாணத்தில் சுதுமலை-மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இந்திய சாஹித்திய அகாதெமியின் ‘பிரேம்சந்த் பெல்லோஷிப்’, இலங்கை கலாசாரத் திணைக்களத்தின் ‘சாகித்திய ரத்னா’ விருதுகளைப் பெற்றவர். இந்நூலில் நினைவின் நீள்தடம், ஆன் ரணசிங்க, முழு உலகுமே மௌனித்திருந்தது, செந் தமிழாய்வு, இரண்டு பேரும் இரண்டு போரும், ஃபுர்ணிகாவும் ஃபியோதரவும், கந்தர்புரிக் கதை, குறிப்பேட்டுக் கதைகள், ஒரு கட்டுரையும் ஒரு கதையும், குர்ணா என்றதும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.