17818 நுழைபுலம்.

கு.றஜீபன். யாழ்ப்பாணம்: தமிழியல் ஆய்வு நடுவகம், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

viii, 96 பக்கம், விலை: ரூபா 625., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6331-01-6.

இந்நூல் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ‘கள்ளினும் இனிது காமம்’, ‘இல்லறக் கட்டமைப்பு மேம்பாட்டில் இலக்கியங்களின் வகிபங்கு: திருக்குறள் மற்றும் நாலடியாரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’, ‘யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்: 2009க்குப் பின் தளமாற்றமும் பொருள் புலப்பாட்டு நெறியும்’, ‘ஈழத்து மரபுவழி புலமைத்துவமும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரும்: ஓர் அறிமுகக் குறிப்பு’, ‘தமிழர் பண்பாட்டில் வேலிகள்: யாழ்ப்பாணத்தில் அருகி வரும் வேலிப் பண்பாடு’ ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் முதலிரு கட்டுரைகளும் அற இலக்கியக் கருத்துக்களின் மீள்பார்வையாக அமைபவை. மற்றைய மூன்று கட்டுரைகளும் யாழ்ப்பாணச் சூழலை விளக்குபவை. இவை யுத்தமும் மாபான கல்வியும் பண்பாடும் எனத் தேடல் செய்யும் ஆய்வாளர்களுக்கு பயனுள்ள கட்டுரைகளாகும்.

ஏனைய பதிவுகள்