ஷோபாசக்தி (இயற்பெயர்: அன்ரனிதாசன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 2வது பதிப்பு, டிசம்பர் 2021, 1வது பதிப்பு, ஜுலை 2011. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 21.5×14 சமீ.
இந்நூலில் ரோமங்களின் சேகரிப்புக் கிடங்கு, அரசியல் சீரழிவும் வீழ்ச்சியும், அவதூறொன்றே அரசியல் மூலதனம், அவதூறுக்கு வாய்களுண்டு ஆனால் காதுகள் இருப்பதில்லை, மாதனமுத்தா, குட்டிக்குட்டி மோடிகள், நடராசர் மான்மியம், ஓர் அவதூறின் முடிவு, அவதூறுகளிலிருந்து தண்டனையை நோக்கி ஆகிய ஒன்பது கட்டுரைகளைக் கொண்டுள்ள இத்தொகுப்பில் பின்னிணைப்புகளாக, முகப் புத்தகம், துயருறும் எழுத்து, மார்க்சிய முத்திரையும் இணைய அவதூறுகளும் பெண்ணியச் சிந்தனையும், கீற்றுவின் அவதூறு வரிசை ஆகிய நான்கு ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.