அ.முத்துலிங்கம் (மூலம்), இரா.துரைப்பாண்டி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 040: எழுத்து பிரசுரம், Zero DegreePublishing, No.55 (7), R-Block, 6th Avenue, அண்ணா நகர், 1வது பதிப்பு, ஜுன் 2023. (சென்னை 600 018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42 கே.பி.தாசன் தெரு, தேனாம்பேட்டை).
244 பக்கம், விலை: இந்திய ரூபா 290., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-90053-58-2.
கனடாவில் வாழும் ஈழத்து எழுத்தாளரும் சிறந்த கதை சொல்லியுமான அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அனுபவக் கட்டுரைகளில் தேர்ந்த சிலவற்றை கனடா வாழ்க்கை, சந்திப்பு, ரசனை, பயணம், கண்டதும் கேட்டதும் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் தொகுத்து வழங்கியுள்ளார் இரா.துரைப்பாண்டி. ‘கனடா வாழ்க்கை’ என்ற முதலாவது பிரிவில், கனடாவில் கடன், கனடாவில் வீடு, கனடாவில் கார், கனடாவில் சுப்பர் மார்க்கெட், கனடாவில் கால்சட்டை வாங்குவது, கனடாவில் கிணறு, கனடாவில் கார் ரேஸ், ஐந்து பணத்துக்கு ஒரு குதிரை ஆகிய 8 கட்டுரைகளும், ‘சந்திப்பு’ என்ற இரண்டாவது பிரிவில் எதிர்பாராத அடி, சந்தா குரூசில் சு.ரா., இருட்டறையில் வெளிச்சம் வரவேண்டும், அது அங்கே இருப்பது எனக்குத் தெரியும், மாதம் இரண்டு டொலர்-டேவிட் பெஸ்மொஸ்கிஸ் நேர்காணல் ஆகிய 5 கட்டுரைகளும், ‘ரசனை’ என்ற மூன்றாவது பிரிவில் காத்தவராயனுக்குக் காத்திருப்பது, கலை நிகழ்வு, ஒரு முறை கூட நிலத்திலே விழவில்லை, நீ ஷேக்ஸ்பியரிலும் மோசமாய் எழுதுகிறாய் ஆகிய 4 கட்டுரைகளும், ‘பயணம்’ என்ற நான்காவது பிரிவில், வெள்ளிமலைப் பயணம், பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும், சட்டவிரோதமான காரியம் ஆகிய மூன்று கட்டுரைகளும், ‘கண்டதும் கேட்டதும்’ என்ற ஐந்தாவது (இறுதிப்) பிரிவில் யேசுமாதா போன்ற முகம், உன் குதிரைகளை இழுத்துப் பிடி, பெரியமுள் இரண்டில் வந்தவுடன், நூறு வருடம் லேட், மூளை செத்தவன் ஆகிய 5 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71522).