சபா. ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
iv, 108 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-176-2.
உற்றறி கோட்பாடும் கலை இலக்கியங்களும், அறிவும் அதிகாரமும் இலக்கியமும், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம், இலக்கியமும் வர்க்கத் தளங்களும், கலைச்சுவையும் சமூக வர்க்கங்களும், வர்க்க முரண்பாடும் அழகியல் திறனாய்வும், இலக்கியத் திறனாய்வும் விஞ்ஞான மயப்பாடும், இனக்குழும அழகியல், இலக்கியமும் பரிசோதனையும், இலக்கிய வடிவமாகவும் திறனாய்வு, ஆக்க மலர்ச்சியும் கலைப்படைப்பும், பண்பாட்டுக் கைத்தொழில், நுகர்வோர் வாதமும் இலக்கியமும், இசை இலக்கியம், கலை இலக்கியமும் தரம் பற்றிய தீர்மானிப்பும், சிறுவர் இலக்கியமும் மேலாதிக்கமும், அன்னியமாதலும் கலையாக்கமும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. கலாநிதி சபா. ஜெயராசா தமிழில் ‘கல்வியியல்’ துறை சார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது புலமை மரபு எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.