ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 3வது பதிப்பு, டிசம்பர் 2021, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014, 2வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
286 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 270.00, அளவு: 21.5×14 சமீ.
இக்கட்டுரைத் தொகுப்பு முற்றிலும் ஜனநாயக சொல்லாடல்களின் உளம்சார்ந்த பிரதியாகின்றது. கட்டுரைகளை கதைகளாக்கவும், கதைகளைக் கட்டுரைகளாக்கவும் தெரிந்த இலக்கிய வித்தைக்காரனாக ஷோபாசக்தி இந்நூலிலும் தன்னை இனம்காட்டுகின்றார். நான்கு பிரிவுகளில் இவரது முப்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. ‘தனிச்சொல்’ என்ற முதற் பிரிவில், தூங்கும் பனிநீரே, இனப்படுகொலை ஆவணம், காமினி பாஸ் தவறுசெய்துவிட்டார், நாடு கடந்த தமிழீழஅரசு, பிறழ் சாட்சியம், கெட்ட சினிமா எடுக்கலாம், பிரபாகரன் ஜீவிக்கிறார், குழந்தைப் பாத்திரம், முன்னொரு காலத்தில் பொங்கல் இருந்தது, அக்கா அக்கா என்றாய், இலக்கியச் சந்திப்பும் இயேசுக் கிறிஸ்துவும், சீமானும் செல்வியும், ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும் ஆகிய ஆக்கங்களும், ‘அகச்சொல்’ என்ற இரண்டாம் பிரிவில், அம்முக் குட்டியின் முகப்புத்தகம், சாயும் காலம், ஒரு சண்டைக்கும் ஒரு மன்னிப்புக்கும் இடையில் ஆகிய ஆக்கங்களும், ‘விளிச்சொல்’ என்ற மூன்றாம் பிரிவில் நெருப்புத் துளி, பகை மறப்பு போர்க் குற்றவாளிகளுடன் அல்ல, வித்தியாசங்களின் புத்தகம், யுத்த தூஷணம் ஆகிய ஆக்கங்களும், ‘மறு சொல்’ என்ற நான்காவது (இறுதிப்) பிரிவில், அன்புள்ள ஹெலன் டெமூத், அமரந்தாவின் கடிதம், விருமாண்டியிஸம், தமிழின உணர்வைப் புரிந்துகொள்ளல், வாளின் முனையில் உருளும் குழந்தை, கைதும் கருத்துச் சுதந்திரமும், வெள்ளைக்கொடி விவகாரம், வாருங்கள் தலித் மாநாட்டிற்கு, கசகறணம், பொலிவார் செங்குதிரையில் அலைகளில் தாவிவந்தார் ஆகியஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.