சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 125 பக்கம், விலை: ரூபா 1450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-664-9.
சங்க காலம் முதல் நாயக்கர் காலம் வரை ‘அறம்’ எவ்வாறு தமிழ்ச் சமூகத்தினுடைய இயக்கத்தின் பன்முகப்பட்ட கூறுகளை இயக்கியும் கட்டுப்படுத்தியும் வந்திருக்கிறது என்பதை இலக்கியத்தின்வழி எடுத்துரைப்பதாக இந்நூல் அமைகின்றது. அறமும் அற இலக்கியங்களும், சங்க இலக்கியங்களில் அறம், சங்கமருவிய கால இலக்கியங்கள், பல்லவர் காலப் பக்தி இலக்கியங்களில் அறம், சோழர்காலக் காவியங்களில் அறம், விஜயநகர நாயக்கர் காலம் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சின்னத்தம்பி சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். மட்டக்களப்பு வாய்மொழிப் பாடல்கள்: கட்டுப் பாடல்களின் ஆக்கமும் பயில்நிலையும், கிழக்கிலங்கை மரபுவழித் தமிழ் இலக்கியங்கள் ஆகிய ஆய்வுநூல்களை எழுதியுள்ளதுடன் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். இவர் ‘மொழிதல்’ ஆய்விதழின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றுகின்றார்.