17827 பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் தமிழ் உரைநடை வரலாறும்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

28 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-53-5.

தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதப்பெற்ற நூல்களுள் முக்கியமானதாக பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (1951) கருதப்படுகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றினை தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளின் பின்புலத்தில் எடுத்துக்கூறிய முதற் பாடநூல் இதுவாகும். இன்று மாணவர்களிடையே பெருவழக்கில் உள்ள இலக்கிய வரலாற்றுக்காலப் பெயர்கள் இந்நூலில் இருந்தே எடுத்தாளப்பட்டு வந்துள்ளன என்பது இந்த நூலின் சிறப்புகளில் ஒன்றாகும். 1957இல் வெளிவந்த பேராசிரியரின் ‘தமிழ் உரைநடை வரலாறு’ என்ற நூல் தமிழில் உரைநடை இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றினைத் தெளிவாக எடுத்துக்கூறும் ஆய்வுநூலாகும். சங்க காலம், களவியலுரைக் காலம், உரையாசிரியர்கள் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு ஆகிய ஐந்து காலப் பிரிவுகளின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரைநடை எழுத்துக்களின் வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்தின் வளச்செழுமை, ஆகியவற்றை இந்நூல் விளக்குகின்றது. ஈழக்கவி இவ்விரு நூல்களையும் இந்நூலில் விரிவாக அறிமுகம் செய்துள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 329ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்