அபிமன்னசிங்கம் சித்தாவத்தை உதயகுமார். சுன்னாகம்: Institute of Historical Studies, சித்தாவத்தை, உடுவில், 1வது பதிப்பு, ஜுலை 2019. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).
xxix, (4), 97 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
நூலாசிரியர் உடுவில் சித்தாவத்தை என்ற விவசயக் கிராமத்தில் 14.11.1947 அன்று பிறந்தவர். 1967இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராதனை வளாகத்தில் பொறியியல் துறையில் இணைந்து பட்டம் பெற்றவர். 15 ஆண்டுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து 1990இல் நாடு திரும்பினார். சுன்னாகத்தில் Institute of Historical Studies என்ற இவரது நிறுவனத்தின் வழியாக பல அரசியல், வரலாற்று ஆய்வு நூல்களை ஜுலை 1990 முதல் எழுதி வந்துள்ளார். இன்று Google மற்றும் Search Engines பாவனையில் இருப்பதாலும், தமிழ் ஆங்கில விக்கிபீடியா, ஏனையவைகளில் இருந்து பல்வேறு விடயங்களைப் பற்றி ஆங்கில, தமிழ் மொழிகளில் அறியக்கூடியதாக இருக்கும் நிலை காணப்படுவதாலும், கம்பன், மஹாவம்ஸ, இராமாயணம் என்பன தொடர்பாக இவற்றில் பிழையாகக் கூறப்பட்டு வரும் விடயங்கள் பற்றியே இச்சிறு ஆய்வு நூலில் முக்கியமாக ஆராயப்படுகின்றன.