17830 புறநானூற்றில் அறம்.

முருகையா சதீஸ். திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், யு.சு.வுசயனைபெ, 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆவணி 2023. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ், பண்டத்தரிப்பு).

ix, 104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-99407-6-5.

இரண்டாயிரம்; ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல்கள் கற்பனையும், கனவும், பொய்யும், புனைவுமற்ற சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தை உள்ளபடி காட்டும் படிமக் கலங்களாகும். அறமும், பொருளும் முதலாக மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத மறம், மானம் முதலிய நற்பண்புகளும் கடமையும் நற்றிறமும், உயிரோடு கெழுமிய நட்பும், செங்கோன்மையும் கடவுள் பற்றும், பகைமையோடு பொருது காட்சியையும் காணலாம். படையொடு கூடிய பெருவேந்தரையும், கொடையுடைமை பொருந்திய வள்ளல்களையும், கற்றறிந்து அடங்கிய சான்றோர்களையும், புறநானூற்றுப் பாடல்களில் காணலாம். அத்தகைய சிறப்புப் பெற்ற புறநானூற்றில் சிதறுண்ட கிடக்கும் அறம்சார்ந்த கருத்துக்களை இந்நூலின் வழியாக ஆசிரியர் கட்டமைக்க முயன்றுள்ளார். இந்நூல் அம்மா பதிப்பகத்தின் 31ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113545).

ஏனைய பதிவுகள்