17833 அத்துமீறும் வாசிப்பு (கட்டுரைகள்).

றியாஸ் குரானா. தமிழ்நாடு: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம் 635 112, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (தமிழ்நாடு: கனிக்ஸ் பிரின்டர்ஸ், கிருஷ்ணகிரி).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.

இந்நூலில் கவிஞர் றியாஸ் குரானா எழுதிய 21 இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் பன்னிரண்டு கட்டுரைகளும் ‘நவீன கவிதை மனம்’ என்ற தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளாகும். இவற்றினையடுத்து, கலாப்பரியா ஏளு கல்யாண்ஜி-சிறு பேச்சு நவீன கவிதைக்கு அப்பால் கவிதையை நகர்த்துதல், ரீமேக்-நல்ல கத நெடுப்பமில்ல, மனுஷ்ய புத்திரனின் கவிதையை முசுப்பாத்தியாகக் கலாய்த்தல், கவிதையும் ஸ்டேற்மென்டும், கவிதை பற்றி பேசும்போது நாம் பேசாதவை, கவிதையும் உணர்ச்சியும், ‘அத்து’ மீறும் இலக்கியமும் ஈழத்துச் சமாச்சாரமும், இசையின் கவிதை ஒன்று ஒரு காமடி விமர்சனம், கவிதையும் குழப்பமும் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. றியாஸ் குரானா இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர். ஏற்கெனவே ஐந்து கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இது இவரது கட்டுரைகளின் தொகுப்பு. இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்