17835 அன்றலர்ந்த மலர்கள்: சுய ஆய்வுக் கட்டுரைகள்.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, கொழும்பு: மீரா பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

124 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-15-3.

நாவல் இலக்கியத்துக்கொரு புதுவாசல்: தாமரைச் செல்வியின் ‘உயிர் வாசம்’, நலவியல் இலக்கியத்திலோர் புதுவகைப் புனைவு: எம்.கே.முருகானந்தனின் ‘டாக்குத்தரின் தொணதொணப்பு’, சிறுவர்களின் அறிவியல் தேடலுக்கு அடித்தளமிடும் கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள், அறிவியல் எழுத்துக்களின் சமகால செல்நெறிக்கான ஒரு சாட்சி: என்.பேராசிரியனின் ‘மாசுறும் பூமி’, புத்தகவுலகில் புதுயுகத் தடங்கள் விதித்திடும் பற்றுதலுடன் பயணிக்கும் ‘எங்கட புத்தகங்கள்’, நாவல் ஆய்வாளர்களுக்கு உசாத்துணையாகவல்ல ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ், திறனாய்தலின் அடுத்த கட்ட நகர்விற்கு படிக்கட்டுகளாக அமையும் இ.இராஜேஸ்கண்ணனின் இரு பனுவல்கள், பத்தி எழுத்தில் ஒரு புதிய பாய்ச்சல் பாரீர்: வைத்தியர் தி.ஞானசேகரனின் ‘யாவரும் கேளிர்’, மரபுரிமை தொடர்பில் மற்றுமொரு ஆய்வுநூல்: இரகுவரனின் ‘தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம்’, சிறுவர் இலக்கியத்தில் ஒரு முன்னகர்வு வண. செபமாலை அன்புராசா அடிகளாரின் ‘அண்ணன் ஆமையும் தம்பி முயலும்’, தீட்சணமாக ஒலித்திருக்கும் தாட்சாயணியின் ஒன்பதாவது குரல், புனைகதை வெளியில் புதிய எல்லையினைத் தொட்டு நிற்கும் பிரமிளா பிரதீபனின் ‘விரும்பித் தொலையுமொரு காடு’, புனைகதை இலக்கியத்திலொரு புதிய பாய்ச்சல்: பேராசிரியர் ஆ.சி.கந்தராஜாவின் ‘பணச்சடங்கு’, மண்டூர் அசோகாவின் மீதெழலாய் பழுதறக் கனிந்திருக்கும் ‘எழுதப்படாத கவிதைகள்’, மண்டைதீவின் எட்டுத்திக்கு வட்டாரங்களையும் கண்முன் கொணரும் மண்டைதீவு கலைச்செல்வியின் கற்பாறைகள் கண்ணீர் சிந்துகின்றன, சமகால சிறுவர் இலக்கியத்தின் வளத்திற்கோர் வகைமாதிரி பஞ்சகல்யாணியின் ‘கதைமரம்’, இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள், சமூக செய்திகளை சீரோடு சித்திரித்திருக்கும் சிறீரங்கனின் சிவப்புக்கோடு, மலையக வாழ்வியலை முன்னிறுத்தும் பாலரஞ்சனி ஜெயபாலின் ‘நெத்திக்காசு’, வடமராட்சியின் வனப்பான வாழ்வியலுக்கு திடசாட்சியாய் திகழுமொரு கதைத்தொகுதி சிவசோதியின் ‘உறவுகள் சேர்ந்து’ ஆகிய 20 நூல் மதிப்புரைக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்திருக்கின்றன. தினக்குரல் பத்திரிகையில் 2019-2022 காலகட்டத்தில் இவை வெளிவந்தவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 292ஆவது நூலாகவும் மீரா பதிப்பகத்தினரின் 105ஆவது நூலாகவும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்