கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
84 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-45-0.
ஜீவநதி சஞ்சிகையில் க.பரணீதரன் மேற்கொண்ட நேர்காணல், தேசம் பத்திரிகைக்காக அந்தனி ஜீவா மேற்கொண்ட நேர்காணல் ஆகியவற்றுடன் தொடங்கும் இந்நூலில், தொடர்ந்து இராஜேஸ்கண்ணனின் படைப்புகளை முன்வைத்து சக படைப்பாளிகளாலும் இலக்கிய ஆளுமைகளாலும் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இராஜேஸ்கண்ணனின் ‘முதுசொமாக’ (செங்கை அழியான்), சந்தங்களால் இணையும் வாழ்வு (சு.குணேஸ்வரன்), இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள்’ (தி.ஞானசேகரன்), வதிரி இ.இராஜேஸ்கண்ணனின் ‘இலக்கியத்தில் சமூகம்: பார்வைகளும் பதிவுகளும்’ (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), இராஜேஸ்கண்ணனின் கிராமியம்- கல்வி மேம்பாடு (என்.சண்முகலிங்கன்), இராஜேஸ்கண்ணனின் ‘இரகசியமாய்க் கொல்லும் இருள்’ (கோகிலா மகேந்திரன்), திறனாய்தலின் அடுத்த கட்ட நகர்விற்கு படிக்கட்டுகளாக அமையும் பனுவல்கள் (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்), இராஜேஸ்கண்ணனின் ‘கொவிட்-19 பேரிடர் காலத்தில் இளையோரின் கல்வி சவால்களும் சாத்தியங்களும்’ (மா.கருணாநிதி), காலம் கொன்ற நினைவுகளை மீட்கும் இராஜேஸ்கண்ணனின் ‘கிராமத்து மனிதர்கள்’ (மு.அநாதரட்சகன்), எழுத்தில் வரையப்பட்ட சித்திரங்கள் (அ.இராமசாமி), மறந்த மனிதர்களை மீண்டும் உயிர்ப்பித்து உலாவச் செய்யும் ‘கிராமத்து மனிதர்கள்’ (கே.எம்.செல்வதாஸ்), மனித குலத்தின் மையத்தை தொடும் உணர்வுகள் (தில்லை) ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இ.இராஜேஸ்கண்ணனின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 323ஆவது நூலாக வெளிவந்துள்ளது. அவர்களின் ‘ஈழத்து இலக்கிய ஆளுமைகள் வரிசை’ யில் இரண்டாவது நூலாகவும் வெளிவந்துள்ளது.