அ.பௌநந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
102 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-63-5.
இந்நூலில் ‘அனாருடைய கவிதைகளில் எதிர்ப்புக்குரல்: பெண் விடுதலை நோக்கிய பார்வை’, ‘ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள்’, ‘பெண்ணியாவின் கவிதைகள் பற்றிய ஒரு மதிப்பீட்டுஆய்வு: பெண்நிலை நோக்கு அணுகுமுறை’, ‘பெண்களது பிரச்சினைகளின் பிரதிமை- தாட்சாயணியின் ‘யாருக்கோ பெய்யும் மழை’ கவிதைத் தொகுதியை முன்வைத்து’, ‘உள்நாட்டு யுத்தத்தின் வலிகள்: ஃபஹீமா ஜஹானின் கவிதைகளை முன்வைத்த ஒரு குறிப்பு’, ‘மனோகரியின் ‘சுயவெளிகள்’ தழுவி நதி குறித்துப் பாயும் பெண்நிலைப் பெருக்கு’, பாரம்பரிய பெண்நிலைக் கருத்துகளிலிருந்தான கட்டுடைப்பு: சர்மிளா ஸெய்யித் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” ஆகிய ஏழு திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் அமிர்தலிங்கம் பௌநந்தி தமிழில் இளமாணி சிறப்புப் பட்டமும் முதுதத்துவமாணிப் பட்டமும் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழக கல்விப்பீட விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர், பழந்தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிவருபவர். இத் தொகுப்பில் ஐந்து பெண் கவிஞர்களின் கவிதைகளில் காணப்படும் பெண்ணியச் சிந்தனைகள் குறித்தும் இரு பெண் கவிஞர்களின் கவிதைகளில் மேலோங்கியுள்ள இன விடுதலை உணர்வு குறித்தும் தமது விமர்சனங்களை நேர்மையாக முன்வைத்துள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 244ஆவது நூலாக வெளிவந்துள்ளது.