17838 ஈழத்து இலக்கியம்: பதிவும் பார்வையும்.

ஹாயத்திரி சண்முகநாதன். யாழ்ப்பாணம்: ஹாயத்திரி சண்முகநாதன், 296A, நாவலர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், திருநெல்வேலி, இருபாலை).

x, 134 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 24×17  சமீ., ISBN: 978-624-99859-2-6.

இந்நூலில் ஹாயத்திரி சண்முகநாதன் எழுதிய முற்போக்கு கவிதைப் பரப்பில் கவிஞர் சுபத்திரன், டானியலின் படைப்புகளில் சமூக அரசியல் உணர்வுநிலை, மலையக இலக்கியப் பரப்பில் கவிஞர் ஸி.வி.வேலுப்பிள்ளை, மலையக இலக்கியப் பரப்பில் குறிஞ்சித் தென்னவனின் கவிதைகள், சமூகவியல் நோக்கில் மஹாகவி, நொறுங்குண்ட இருதயம் -சமூகவியல் பார்வை, தொழிலாளர்களை மையப்படுத்திய செ.கணேசலிங்கன் படைப்புக்கள், செங்கை ஆழியான் நாவல்களில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகிய எட்டு சமகால இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நுண்கலைகளுக்கான சிறப்புச் சஞ்சிகையாக வெளிவரும் ‘இசை ஆரம்’  சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றும் செல்வி ஹாயத்திரி சண்முகநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகக் கற்று இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தமிழ் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இவர் எழுதிய ‘தமிழிலக்கியக் கட்டுரைகள்’ என்னும் நூல் 2022இல் வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் தமிழ் வளர்ச்சி நூல்கள் துறைக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருந்தது.

ஏனைய பதிவுகள்

Jumanji On the web Slot Game On line

Content Ancient Arcadia slot online casino | Enjoy Harbors 100percent free Inside Demanded Gambling enterprises Should i Have fun with Free Revolves To the Cell