த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
124 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-55-9.
சமகாலத்தில் வெளிவந்த 37 ஈழத்துத் தமிழ் நூல்களுக்காக கலாநிதி த.கலாமணி எழுதி வழங்கியிருந்த அணிந்துரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இந்நூலின் பின்னிணைப்பாக, ஏழு நூல்களுக்காக இவர் வழங்கியிருந்த பின்னட்டைக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. டாக்டர் பரமநாதன் விக்னேஸ்வரா (13.11.1930-22.02.2022) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் ‘நோயாளிகளின் நம்பிக்கையாய் விளங்கிய மருத்துவர் விக்னேஸ்வரா’ என்ற தலைப்பில் உடுவில் பிராந்தியத்தின் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி திரு. வி.ஏகாம்பரநாதன் அவர்கள் எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 332ஆவது நூலாக வெளிவந்துள்ளது.