கொற்றை பி.கிருஷ்ணானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 120 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-50-5.
இந்நூலில், தமிழ் நாடகங்களின் வளர்ச்சிப் போக்கும் ஈழத்தவர்களின் வகிபங்கும், கிராமிய மக்களின் பண்புகளை வெளிப்படுத்தும் கிராமிய வாய்மொழிக் கதைகள், கற்றுக் கனிந்த பண்டிதர்களும் பயமறியாக் கன்றுகளும், சத்தியமும் சாத்தியமும், குருதிமலையில் ஒரு குறுகிய பயணம், சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் க.சின்னராஜனின் ‘தண்ணீர்’ சிறுகதைத் தொகுதி, திருமதி குயீன்ஜெஸிலி கலாமணியின் ‘ஈழத்து இசை நாடகமரபு வளர்ச்சியில் அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா’ ஆய்வு நூல், பன்முக ஆளுமை கொண்ட யோகேஸ்வரி சிவப்பிரகாசம், மானிட நேசிப்பின் அதீத வெளிப்பாடே மு.அநாதரட்சகனின் ‘சமூகவெளி’ தரிசனங்களும் பதிவுகளும், போர்க்கால இலக்கியத்தில் தவிர்த்துவிட முடியாத ‘கடலின் கடைசி அலை’, அந்தரங்க ஆத்மாவின் குரல்கள், ச.முருகானந்தனின் நாவல்கள், கலாநிதி சு.குணேஸ்வரனின் ‘பார்வைகள் மீதான பார்வை’, கலைப்பாரதி க.சின்னராஜன் கவிதைகள், தெணியானும் ஜீவநதியும், வங்கிக் கடனும் வாழ்க்கைத் தரமும், அவர் அவரே தான், வல்வைக்கான ஒரு குறியீடு காண்டீபன் அவர்கள், காளைக்குக் கடனே ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற 19 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளின் ஆசிரியர் கிருஷ்ணானந்தன், வடமராட்சி கொற்றாவத்தையில் 20.07.1954 இல் பிறந்தவர். நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர். வங்கித் தொழிலில் தான் கொண்ட ஆர்வத்தினால் வங்கி முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1971இல் தனது முதலாவது கவிதையை ‘குங்குமம்’ (கொழும்பு) சஞ்சிகையில் இடம்பெறக் கண்டவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி (இன்னுமோர் உலகம்) 2012இல் கொடகே விருதினைப் பெற்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 231ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71350).