றியாஸ் குரானா. தமிழ்நாடு: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம் 635 112, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (தமிழ்நாடு: கனிக்ஸ் பிரின்டர்ஸ், கிருஷ்ணகிரி).
241 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ.
இந்நூலில் கவிஞர் றியாஸ் குரானா எழுதிய 12 இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நவீன கவிதை காலாவதியாகிவிட்டது, கற்பனைச் செயல் என்பது மேலதிகச் சிந்தனை, கவிதையும் வாசக மனநிலையும், கவிதையின் உண்மைகள், கற்பனையும் மொழியும், தமிழ்க் கவிதை வடிவம், கவிதை மொழியைப் பெருக்குகிறது, கவிதையின் நகர்வுகள்-இனி என்ன?, ஈழத்து நவீன கவிதை: ஏற்புகளும் மறுப்புகளுமாக ஓர் ‘அத்துமீறும்’ வாசிப்பு, நவீன கவிதையின் மறைந்திருக்கும் பிரதேசம், ஈழம்-இலக்கியம்-அரசியல்-பிரதிபலிப்பு, கவிதை எழுதப் பயில்தல் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. றியாஸ் குரானா, கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட இலக்கியச் செயற்பாட்டாளர். ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளியில் பின்நவீனத்துவ எழுத்துகளுக்கான களத்தினைக் கட்டமைத்த முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். பின்நவீனத்துவ கருத்தியல் சார்ந்து ஈழத்தில் வெளிவந்த ‘பெருவெளி’ சிற்றிதழின் நிறுவுநர்களில் ஒருவர்.