17847 பேராசிரியர் செ.யோகராசாவின் இலக்கியக் கட்டுரைகள்.

செ.யோகராசா (மூலம்), க.பரணீதரன், த.அஜந்தகுமார் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

106 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-75-7.

ஜீவநதியில் வெளியாகிய பேராசிரியர், அமரர் செ.யோகராசாவின் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.  இதில் பெண்போராளிகளின் கவிதைகள் சில அவதானங்கள், ஈழத்தில் குறும்பாவின் தோற்றமும் வளர்ச்சியும், ஈழத்துப் பெண்கள் கவிதை வளர்ச்சியும் தளர்ச்சியும் வளமும், நவீன வாய்மொழிப் பாரம்பரியத்தில் கிழக்குப் பெண் கவிஞர்கள், ஈழத்து நவீன கவிதை உருவாக்கத்தில் வாய்மொழிப் பாடல்களின் செல்வாக்கு, ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் இந்திய தமிழக செல்வாக்கு, கிழக்கிலங்கை பாணர் பாடல் மரபு, வன்னிப்பிரதேச நாட்டார் பாடல்கள் சில தனித்துவ இயல்புகளில் தெளிவுறல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் கிராமத்தில் பிறந்த இவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். கடந்த 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராக இணைந்த இவர் 2009இல் பேராசிரியராக நியமனம் பெற்று 2014 இல் 23 வருடகால பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது நூல்களான ‘பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை’ பிரதேச சாகித்திய விருதை 2007இலும், ‘ஈழத்து நாவல் வளர்ச்சியும் வளமும்’ பிரதேச சாகித்திய விருதை 2008இலும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எட்டு நூல்கள், ஆறு தொகுப்பு நூல்கள் என்பனவற்றை எமக்கு வழங்கியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 423ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Norske maria bingo norge Casino På Nett

Content Kenapa Anda Perlu Memilih Sinki Keluli Tahan Karat (Stainless Steel) Untuk Dapur Anda? Hvordan kringkaste formue per casino? Andre kampanjer og tilbud Hvilke lisenser