17849 வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்.

வ.ந.கிரிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 166 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-45-1.வ.ந.கிரிதரனின் பல்வகைக் கட்டுரைகளை உள்ளடக்கிய முதலாவது தொகுப்பு. இதில் பதினான்கு கட்டுரைகள் அடங்கியுள்ளன. தனது பத்தாவது வயதில் எழுத்துலகில் காலடி வைத்த வ.ந.கிரிதரன், தற்போது கனடாவில் டொரண்டோ மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ‘ஈழநாடு சிறுவர் மலர்’ மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவர். முதலாவது கவிதையான ‘பொங்கலோ பொங்கல்’ சுதந்திரனில் வெளிவந்துள்ளது. அதன் பின் இவரது இளம்பராயத்து ஆக்கங்கள் பல வெற்றிமணி, சுதந்திரன், சிரித்திரன் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இவரது முதலாவது சிறுகதையான ‘சலனங்கள்’ சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கதைகளில் ஒன்றாக வெளிவந்தது. இவரது ‘நல்லூர் ராஜதானி நகரஅமைப்பு’, ‘வரலாற்றுச் சின்னங்கள்பேணப்படுதல்’, ‘கோப்பாய்க் கோட்டை’ ஆகிய வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன. இந்நூலில் பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு, தமிழினி இலக்கிய வானிலொரு மின்னல், தமிழினியின் சுயவிமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டைவாளா? அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை, அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சுவாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியல் பார்வைகளும், அ.ந.க.வின் ‘மனக்கண்’, சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு, கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ பற்றி, விஷ்ணுபுரம் சில குறிப்புகள், ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு, பாரதி ஒரு மார்க்சியவாதியா?, ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’, திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது, எல்லாளனின் ‘ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள்’ தொகுப்பு-முக்கியமானதோர் ஆவணப் பதிவு ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 227ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்