17850 வாசிப்பில் நினைந்தூறல்: விமர்சனக் கட்டுரைகள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

300 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-46-1.

எம்.கே. முருகானந்தன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பருத்தித்துறை பிரதேசத்தில் வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து எழுத்தாளர். தொழில்ரீதியாக மருத்துவராகப் பணியாற்றும் இவர் 27.3.1948 இல் பிறந்தவர். இவர் நலவியல் கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இதில் இவர் எழுதிய 55 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்தும் தான் வாசித்து இரசித்த நூல்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகளாகும். ஒரு எழுதுவினைஞனின் டயறி, அசையும் படிமங்கள், அசோகனின் வைத்தியசாலை, தேடலே வாழ்க்கையாய், சாமானிய ஜீவிதம், மீண்டும் துளிர்ப்போம், ஏதனம், எரிமலை, மனித நடத்தையைப் புரிந்துகொள்ளல், குறிப்பேட்டிலிருந்து, நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள், பா.இரகுவரனின் கல்லூரி நாடகங்கள், கனக செந்தி கதா விருது பெற்ற சிறுகதைகள், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, குமிழி, உதிரிகளும், மணற்கும்பி, மரக்கொக்கு, மறுமலர்ச்சிக் கவிதைகள், மாயக் குதிரை, மேடும் பள்ளமும் உள்ளிட்ட 55 நூல்கள் இவரது விமர்சனப் பார்வைக்கு உட்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 416ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க:

இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம். 17853

ஜீவநதி: ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ்-1. 17472

ஜீவநதி: ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ்-2. 17477

ஜீவநதி: ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ்-3. 17490

ஏனைய பதிவுகள்