க.சூரன் (மூலம்), செல்லக்குட்டி கணேசன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
28 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-955-0958-94-8.
அமரர் இரத்தினம் செல்லக்குட்டி நினைவு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல், ஜீவநதி வெளியீட்டகத்தின் 367ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலிலுள்ள விடயங்கள் சைவப்பெரியார் கா.சூரன் அவர்களால் குறிப்புக் கொப்பியில் எழுதி வைக்கப்பட்டவை. எனது மரணத்தின் முன் பின் நடைபெற வேண்டியவை, நான் செய்துவந்த சிவபூசா கைங்கரியங்கள்-தமிழ் மந்திரங்கள், எனது சந்தர்ப்ப வாதங்கள், திருநீலகண்டர் (நீலகண்ட நாயனார் சரித்திர பிரசங்க சாரம்), திருக்குறள், ஆகிய ஐந்து விடயங்கள் இந்நினைவு வெளியீட்டில் பதிப்பிக்கப்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 367ஆவது நூலாக வெளிவந்துள்ளது.