றியாஸ் குரானா. தமிழ்நாடு: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம் 635 112, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (தமிழ்நாடு: கனிக்ஸ் பிரின்டர்ஸ், கிருஷ்ணகிரி).
216 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ.
இந்நூலில் கவிஞர் றியாஸ் குரானா எழுதிய 13 இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வன்முறைதான் மிகக் கவர்ச்சியான ஒன்றாகத் தெரிகிறது, தமிழ் இங்கு பெயரளவில் தேசிய மொழிதான், தமிழின் நவீன கவிதையை விட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது, இலக்கியச் செயற்பாட்டாளர்களிடம் கற்பனை இல்லை, இலக்கியப் பிரதி ஓர் அரசியல் சம்பவத்தைப் பிரதிபலிக்கமுடியாது, இலக்கியப் பிரதிகளுக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் தூண்ட வேண்டும், மக்களைக் கொல்லுவதற்கு உற்சாகமூட்டுவதும் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் செய்வதும் தானே பேரிலக்கியங்களின் வேலை, தமிழ்க் கவிதைகளின் எதிர்காலம்? கவிஞர் றியாஸ் குரானாவுடன் ஓர் உரையாடல், ‘சாரு கண்டிப்பாக புக்கர் பரிசு பெறுவார்’ கவிஞர் றியாஸ் குரானா திட்டவட்டம், எழுத்து தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா? கவிஞர் றியாஸ் குரானாவுடன் கவிதைசார்ந்த உரையாடல், லீனா மணிமேகலை-குட்டி ரேவதி: கவிஞர் றியாஸ் குரானா சுவாரஸ்யமான ஒப்பீடு, இலக்கியம் என்பது பரிதலுக்கேற்ற அர்த்தங்களைப் பெருக்கும் ஓர் இடமாகும்- றியாஸ் குரானா ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.