வி.ரி.இளங்கோவன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசரி ஒழுங்கை, முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
vi, 868 பக்கம், விலை: ரூபா 5900., அளவு: 26×19 சமீ., ISBN: 978-624-6098-04-9.
பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர் கலாபூஷணம் வி.ரி.இளங்கோவனின் 55 ஆண்டுக்கால எழுத்துப்பணியின் நிறைவில் அவரது படைப்புக்கள் யாவற்றையும் ஒருங்கிணைத்து வெளிவரும் பெருந்தொகுப்பு இது. சிறுகதைகள், கட்டுரைகள், தமிழ் மருத்துவம்- நோய் தீர்க்கும் மூலிகைகள், கவிதைகள், நேர்காணல்கள், முன்னுரைகள், முகநூல் குறிப்புகள் சில, இவர்கள் பார்வையில் இளங்கோவன் ஆகிய எட்டுப் பெரும்பிரிவுகளின் கீழ் இவரது படைப்பாக்கங்கள் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன.