க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
204 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-29-4.
இந்நூலில் பா.இரகுவரன், ந.இரவீந்திரன், திக்குவல்லை கமால், தம்பிஐயா தேவதாஸ், சீமான் பத்திநாதன் பர்ணாந்து, க.தணிகாசலம், த.கலாமணி, மு.சிவலிங்கம், நா.யோகேந்திரநாதன், அல் அஸுமத், சிவ ஆரூரன், க.பாலேந்திரா, நெடுந்தீவு மகேஷ், ஏ.பீர்முகம்மது, பாலமுனை பாறூக், எஸ்.ஏ.உதயன், ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், அ.இரவி ஆகியோருடனான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஜீவநதி சிற்றிதழில் முன்னர் வெளியானவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 420ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வேர்சோ பக்கத்தில் ‘கலை இலக்கிய ஆளுமைகளுடன் நான்’ என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.