17856 கலைச்செல்வனின் பிரதிகள்.

கலைச்செல்வன் (மூலம்), லக்ஷ்மி (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: உயிர்நிழல், இணை வெளியீடு, நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 600 077: மணி ஓப்செட்).

(10), 11-371 பக்கம், விலை: இந்திய ரூபா 525., அளவு: 23×15 சமீ., ISBN: 978-93-88631-27-3.

கனகசிங்கம் கலைச்செல்வன் (28.03.1960-05.03.2005), யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுவன்-வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழைய மாணவன். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பணியாற்றிய இவர் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (PLOTE) ஆதரவாளராகச் செயற்பட்டவர். 1984இல் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து பாரிசிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வாழ்ந்தவர். தேடல், பள்ளம், எக்ஸில், உயிர்நிழல், இனியும் சூல்கொள், தோற்றுத்தான் போவோமா? ஆகிய சஞ்சிகைகளினதும் தொகுப்புகளினதும் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியவர். எக்ஸில் வெளியீட்டகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். அதன்வழியாக மறையாத மறுபாதி (புகலிடப் பெண்கள் கவிதைத் தொகுப்பு-1992), தமிழில் தரிப்புக் குறிகளின் பயன்பாடு (சி.சிவசேகரம்-1994), எனக்குள் பெய்யும் மழை (ஜமுனா ராஜேந்திரன்-1997), பனிவயல் உழவு (திருமாவளவன்-2000), காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள் (றஷ்மி-2002) ஆகிய நூல்களை வெளியிட்டவர். ‘உயிர்நிழல்’ சஞ்சிகையை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திவந்தவர். கலைச்செல்வனின் பல்வேறு ஆக்கங்களினதும் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கவிதைகள், சிறுகதைகள், மனதின் வழித்தடம், புகலிட இலக்கியம்-புகல்வாழ் குறிப்புகள், நூல்கள்-படைப்பாளிகள்-கலை இலக்கிய நிகழ்வுகள் ஆகிய பகுப்புத் தலைப்புகளின் கீழ் இவ்வாக்கங்கள் வகுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக கலைச்செல்வனின் நினைவுப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16123 நெட்டிலைப்பாயான் எழில் : கோண்டாவில் திருவருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக மலர்.

செல்லப்பா நடராசா (மலர் ஆசிரியர்). கோண்டாவில்: பரிபாலன சபை, திருவருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில்,  1வது பதிப்பு, ஜீன் 2011. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி, நாவலர் வீதிச் சந்தி).